மீண்டும் பேரெழுச்சி கொள்கின்றது மாணவர் சமூகம்!

0
220

பொங்கு தமிழாய் மீண்டும் உரிமைக்குரல் கொடுக்க எம் ஈழநிலம் பெற்றெடுத்த தவப்புதல்வர்கள் மக்கள் சேனையை அணிதிரட்டி சர்வதேச சமூகத்தை கதிகலங்க வைத்தனர் பொங்கு தமிழாய் அன்று…

தணியவில்லை அவர் தாகம்
ஓயாது எம் தேசம் மீண்டும் ஒரு முறை விடுதலை வேட்கையோடு எழுச்சி கொள்கின்றது இளம் சமூகம் .

எதிர்வரும் 16ம் திகதி வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளி வரையிலான மாணவர்களின் கண்டன பேரணிக்கு அனைவரும் ஆதரவை வழங்கி சர்வதேதத்திற்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நிலைப்பிட்டினை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

அதாவது எமது தமிழ் மாணவர் சமூகத்தினர் காலம் காலமாக தமது கல்வியுடன் தேசிய போராட்டங்களை ஒழுங்கு செய்து அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் சக்தி படைத்தவர்கள் என்பதற்கு பொங்கு தமிழ் சான்றாகும். அதனைப் போல் தமது கல்வியையும் பொருட்படுத்தாது முழு வீச்சில் எதிர்வரும் 16ம் திகதி போராட்டத்தை ஒழுங்கு செய்து மக்களின் அரசியல் பிரமுகர்களின் சிவில் சமூகத்தினரின் வர்த்தகர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரதும் பேராதரவுடன் மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்

எனவே தமிழ் உறவுகள் உணர்வாளர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சரியான பொறுப்புக்கூறல் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துதல் மற்றும் இது வரையிலும் எமது இனப் பிரச்சினை தீர்க்கப் படவில்லை என்பது குறித்தும் சர்வதேதத்திற்கு ஒருமித்த குரலில் தெரிவிக்க எமது எதிர் கால சந்ததியினரான மாணவர்களின் போராட்டம் வலுப்பெற ஒன்றிணையுமாறு மிகவும் உரிமையோடும் அன்பாகவும் அழைத்து நிற்கின்றனர்.

பொங்கி எழு புயலாக

தட்டிப் பார்ப்போம் திறக்க
மறுத்ததால் தகர்த்தெறிவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here