இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள விசைபடகுகளை விடுவிக்கக்கோரியும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தர வேண்டியும் மத்திய அரசை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே மீனவர்கள் திருவோடு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.
ஆனால் பொலிஸார் திருவோடுகளுடன் போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என எச்சரித்து திருவோடுகளை அப்புறப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கவும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த இடத்தில் மீன்பிடிக்க கச்சத்தீவு மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தேவதாஸ் மற்றும் சகாயம் தலைமையில் திருவோடு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்கு பாதுகாப்பிற்கு வந்த பொலிஸார் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்து திருவோடுகளை அப்புறபடுத்தினர். ஏற்கனவே கையில் திருவோடுவுடன் பேரணியாக சென்று தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்ததால் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.