சிறிலங்காவை சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உட்படுத்தவேண்டும்!

0
202

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி விசாரணை செய்வது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆராய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முழுமையான கிளை அலுவலகத்தை இலங்கை அமைத்து அதன் ஊடாக அந்த நாட்டின் மனித உரிமைகள் நிலவரங்களைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இலங்கை தொடர்பான தனது அறிக்கையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் ஆணையாளரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2015ஆம் ஆண்டு ஜெனிவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதன் மூலம் இலங்கை கடந்தகால சம்பவங்களிற்கு தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டது.எனினும், இதனை நோக்கிய தீர்க்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பரந்துபட்ட அதிருப்தி நிலவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here