ஏமாற்றத்தோடு திரும்பிய வலி.வடக்கு மக்கள்:இராணுவம் வெளியேறவில்லை!

0
222
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற் குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வலி.வடக்கு காணிகளை பார்க்கச் சென்ற மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் அந்த பகுதிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதனால் பலரின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது, இதனால் காணிகளைப் பார்க்கச சென்ற மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட 8 கிராமங்களை உள்ளடக்கிய 570 ஏக்கர் காணிகளும் இன்று விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), தையிட்டி தெற்கு(ஜே-250), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்- (ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 570 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.
எனவே வறுத்தலைவிளான் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட தெல்லிப்பழை வைத்தியசாலை வீதி வழியாகவும், பலாலி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்கு செல்லும் மக்கள் தமது காணிகளை பார்வையிட அச்சுவேலி தம்பாட்டி வழியாகவும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு செல்லும் மக்கள் தெல்லிப்பழை,வீமன்காமம் புகையிரத வீதிவழியாகவும் சென்று தமது காணிகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் மீளக்குடியேறும் மக்கள் தங்களுடைய காணிகளை பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னர் அந்தந்தப் பிரிவு கிராம அலுவலர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
kani 8 - Copy kani 1 - Copy kani 2 - Copy kani 3 - Copy kani 4 - Copy kani 5 - Copy kani 6 - Copy kani 7 - Copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here