ஜெனீவாவில் இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று!

0
439

ஜெனீவாவில் இலங்கை குறித்து இவ்வருடம் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் குழு அறையில் இடம்பெறவுள்ளது.

இலங்கை குறித்த தற்போதைய நகல் பிரேரணையை தயாரித்துள்ள பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளே இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இதன்போது ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணையின் நகல்வரைவு தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

விசேடமாக இந்த பிரேரணையில் புதிதாக விடயங்கள் சேர்க்கப்படவேண்டுமா அல்லது ஏற்கனவே பிரேரணையில் உள்ள விடயங்களை திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இதன்போது இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான தமது யோசனைகளை உறுப்பு நாடுகள் முன்வைக்கவுள்ளன.

இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் இலங்கை சார்பிலும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த தமது நிலைப்பாட்டை இலங்கை அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here