திருக்கேதீஸ்வர நுழைவாயிலில்
வளைவு அமைக்க நீதிமன்று அனுமதி
-நந்திக்கொடிகள் ஏற்றப்பட்டு சைவ எழுச்சி-
திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ மதவெறியர்களால் நேற்று அராஜகமாக பிடுங்கியெறியப்பட்ட வளைவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது.
வளைவு பிடுங்கியெறியப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
விசாரணை மேற்கொண்ட நீதிவான் வளைவினை மீண்டும் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதுடன் வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந்தச் சம்பவத்தால் சைவத்தமிழர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் இவ்விடயம் உடனடியாகவே நீதிவானின் கனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஆலய நுழைவாயிலில் மீண்டும் நந்திக் கொடிகள் ஏற்றப்பட்டு சைவ எழுச்சி ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், அங்குள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய தொண்டர்கள், சைவ மகா சபையின் தொண்டர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் இணைந்து இன்று நண்பகல் 12 மணிமுதல் வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வளைவை மீண்டும் அமைப்பதற்கு ஆலய நிர்வாகம், சைவ அமைப்புக்களுடன் அமைச்சர் மனோ கணேசனும் கடும் முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.