பிரான்சில் இளைய தலைமுறையினர் தமிழில் புதிய சாதனை!

1
1752

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணி (B.A) பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில், மாணவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் – 12 வரை நிறைவுசெய்த மாணவர்களே இச்சாதனையை நிகழ்த்தித் தமிழ்ச்சோலைக்கும் அதன் தமிழ் மொழியியல் முறைமைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

சிறிகாந்தராஜா தமிழினி,
சிறிகாந்தராஜா தமிழ்பிரியன்,
தெய்வேந்திரன் அனுஷந்தி,
கமலநாதன் ஷோமிஜா,
சிவகணேசன் சிந்தூரி,
குகானந்தராசா கௌதமி,
மனோகரன் தட்சாயினி,
இராசலிங்கம் றொஷான்,
மோகனராசன் ரஜீவன்ராஜ்
ஜெயசிங்கம் ஜெதுஷா
ஆகியோரே அதிகூடிய புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடாத்தப்படும் குறித்த பட்டப்படிப்பில் , ஏற்கனவே பல பிரான்சில் பிறந்த மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் அதிகத் தொகை இளம் மாணவர்கள் அதிகூடிய புள்ளிகள் பெற்றது இதுவே முதல்முறையாகும்.

தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருவதோடு, பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 29 பட்டகர்களுக்கு, 16/09/2018 அன்று பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றது.இவர்களுக்கான பட்டச்சான்றிதழ்களைத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கியிருந்தது.இச்சான்றிதழ் பொதுநலவாய பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவாலும் பன்னாட்டு பல்கலைகழக ஆணைக்குழுவாலும் அங்கிகரிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இளையவர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களில் வாழும் பெரியவர்களும் தமிழியல் பட்டப்படிப்பைக் கற்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

1 COMMENT

  1. இளம் சமுதாயம் தாய்மொழியில் சாதனைபடைத்தனைக்கு எம் வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here