வவுனியா, நெலுக்குளம் சாம்பல்தோட் டம் பகுதியில் 10 வயது மாணவனொருவர் கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அச்சிறுவனின் சடலம், வீட்டின் பின்புறத்தில் இருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திரசேகரன் சஞ்சய் என்ற சிறுவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளான். இச்சிறுவன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தான் என்று பொலிஸார் கூறினர்.
பாடசாலையில் வகுப்புகளை நிறைவு செய்து வந்த பின்னர் தாயார் உணவை வழங்கி விட்டு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்ற சமயமே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை வீட்டின் பின்புறமிருந்த சடலத்தை உறவினர்கள் தூக்கிவந்து வீட்டுக்குள் வைத்திருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 வயது பாலகனைக் கொன்றது யார், கொலையின் பின்னணி என்ன, மரணத்தின் மர்மம் என்ன என்பன புரியாத புதிராகவுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் தடயங்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்தனர். சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என்ற ஆசையுடன் கல்வியைத் தொடர்ந்த சஞ்சய் இன்று உயிருடன் இல்லை.
அவன் படித்த பள்ளி சோகத்தில் மூழ்கியுள்ளது.