இந்திய – பாகிஸ்தான் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன!

0
668

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. இதில் மிகப்பெரிய பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் மிரட்டியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர். நவ்ஷேரா செக்டாரில் நுழைந்த ஒரு பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான அந்த விமானம் தரையை நோக்கி வந்தபோது, அதில் இருந்த பைலட் பாராசூட் மூலம் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

பாகிஸ்தானால் சுட்டுவீழ்த்தப்பட்தாக கூறப்படும் இந்திய போர் விமானத்தின் விமானி(அபி நந்தன்) பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்கள் காணொளிகள் வெளியாகியுள்ளன.

இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here