வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

0
217

வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த ஆண்டின் இறுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படும் என வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் மாணவர்கள் அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாற்றப்படுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

50 மாணவர்களை விடவும் குறைந்த பாடசாலைகளை பராமரிப்பதற்கு பாரியளவு செலவிடப்பட்ட போதிலும் அதற்கான கற்பித்தல் பிரதிபலன்கள் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு 50 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான பாடசாலைகள் காணப்படுவதாகவும் அவற்றையும் மூடுவது குறித்து இணங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வட மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here