ஆவா குழுவின் தலைவர் எனவும் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டுக்குள் புகுந்து பெற்றோல் ஊற்றி உந்துருளிகள் எரியூட்டப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் கட்டப்பாழி லேனில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று மாலை நடத்தப்பட்டது.
வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பித்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.