யாழில் கைதுசெய்யப்பட்ட கும்பலிடம் ஆயுதங்கள் மீட்பாம்!

0
358

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் கொழும்புக்குத் தப்பி ஓடிவிட்டார். அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில்
உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையை அடுத்து துரித விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் சுப்ரமணியம் தவக்குமார் நியமிக்கப்பட்டார். அத்துடன், வவுனியாவிலிருந்து 50 பொலிஸார் மேலதிகமாக அழைக்கப்பட்டனர்.

சம்பவ நடைபெற்ற அன்றைய தினம், பெற்றோல் குண்டு வீச வந்த இளைஞர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை கருவப்புலம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொலின் மூலம் அடையாளம் காணப்பட்டன.

அதனையடுத்து நேற்றிரவு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

நால்வரும் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடரி, கைக் கிளிப்புகள் மற்றும் பல்சர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் சம்பவ இடம்பெற்ற வீட்டில் முன்னர் வசித்தார். அவர் தற்போது அங்கு இல்லை. அவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது – என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here