தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”
தமிழுக்கும் அமுதென்று பேர்– அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்….என்று கவிஞனொருவன் தமிழின் சிறப்பை கவி வரிகளில் வடித்துச் சென்றான் அன்றொருநாள்.
தமிழின் இனிமை, பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்” என ஆசிரியர் பரிமேலழகர் அழகாக கூறுகிறார்.
இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்கு முன்னும், அது மழை பெய்து கரைந்து மணலாகத் தோன்றியகாலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும்.
இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும், இவ்வாறு தனிப் பெருமையைச் கொண்டு திகழ்கின்றது.
தமிழ் மொழியின் எப்போது தோன்றியது என காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை.
இன்றுவரை ஆராய்ச்சியாளர்களின் தேடலில் தமிழ்மொழி முக்கியம் பெறுகிறது. ஏனெனில் அது ஓர் காலங்கடந்தமொழி. அதற்கு வரலாறு இல்லை, எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை.
எனினும் கல்வெட்டும், புதை பொருட்களும் தமிழ் மொழியின் தொன்மையை இன்றுவரை உலகிற்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன, இவ்வாறான பல பெருமைகள் வாய்ந்த தமிழ்மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம்.
ஒருவொருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் மொழி அவசியம்.
உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.
உலகளவில் மொழிகளுக்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் திகதி “உலக தாய்மொழி தினம்” யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் மொத்தம் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன, இவற்றில் 1500 மொழிகள் ஆயிரம் பேருக்கும் கீ்ழ் பேசுபவை, 3 ஆயிரம் மொழிகள் 10,000க்கும் குறைவான நபர்கள் பேசுபவை.
ஆனால் தமிழ்மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர், உலகில் 94 நாடுகளில் தமிழ்மொழி பேசுபவர்கள் உள்ளனர்.
“ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்” என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம்!
உலகத்தில் மிகவும் பழமையான மொழிகளில் தமிழ் மொழிக்கு முதலிடம்..
உலகத்தில் மிகவும் பழமையான பத்து மொழிகளை வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
■ 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Latin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ – ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
■ 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
■ 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
■ 6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
■ 5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
■ 4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
■ 3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ – ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.