2009 பெப்ரவரி 20 – ம் திகதி இன்றைய நாளில் இரவு ‘தமிழீழம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு வான் கலங்கள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு வான்பரப்பை ஊடறுத்து பறந்து ‘சிறீலங்கா’ அரசுக்குச் சொந்தமான இராணுவ – பொருண்மிய நிலைகள் மீது குண்டுகளை வீசுகின்றன.
இறுதியில் ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலை வேட்கையை உலகறிவித்துவிட்டு, அந்த இனத்திற்கேயுரிய தனித்துவமான கர்வத்தின் – அடங்காமையின் – சினத்தின் வெளிப்பாடாக எதிரி நாட்டு நிலைகள் மீது மோதி வெடிக்கின்றன.
தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.
எதிரிகளை விடுவோம் – வெளித் தரப்பையும் விடுவோம். ஆனால் இன்று நம்மவரே இந்த வரலாற்றை மறந்து பிதற்றுவது எத்தகைய அயோக்கியத்தனம்?
அந்த வான் தாக்குதல்களினூடாக எதிரியின் வல் வளைப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது தலைவருக்குத் தெரியும். ஆனாலும் கட்டளையிட்டார்.
ஏனென்றால், தலைவர் இறுதிவரை வரலாற்றைத் தெளிவாக எழுதுவதிலேயே குறியாக இருந்தார்.
ஏனென்றால், இது தமிழீழத்தின் வரலாற்றுத் தவறாக மட்டுமல்ல உலகெங்கும் போராடும் தேசிய இனங்களின் வரலாற்றுத் தவறாக மாறிவிடும் அபாயத்தை அவர் முன்னுணர்ந்திருந்தார்.
எனவேதான் அடிபணிய மறுத்தார்.
இந்த சிந்தனையே ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக அவரிடம் இருந்து வெளிப்பட்டது.
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.
. எழுதியவர் பரணி.