இன்றும் ஜம்முகாஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல்:4 பேர் பலி!

0
202

காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூடு தணியும் முன்பே இன்றும் ஜம்முகாஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை மீளப் பெற்றுக்கொள்வதாக ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

காஷ்மீர் – புல்வாமா பகுதியில் இன்று மீண்டும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

புல்வாமா -பிங்க்லானா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

குறித்த பகுதியில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஏற்கனவே தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டதன் பின்னர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவி வந்த நிலையில் இந்தத் தாக்குதல் இன்று இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பிரிவினைவாதத் தலைவர்கள் ஐவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் மீளப்பெற்றுள்ளது.

இதன்படி, நேற்று மாலையுடன், பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here