சிலாபம் – மஹவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு
விலகி மின்மாற்றி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது .
சம்பவத்தில் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதுடன், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் தெரியவரவில்லை.