தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்! 18.02.2019

0
627

மாவீரர்களின்இலட்சியமும் தமிழீழமக்களின் தியாகமும் இன்றுவிலைபேசி விற்கப்படும் நிலையில்தமது பூகோள அரசியல்நலன் கருதிசில வல்லரசுகள் தமிழீழவிடுதலையைதாமதிக்கும் வேலைகளில்இறங்கியுள்ளன. எமதுவிடுதலைப்போராட்டத்தின் தர்மத்தைநன்குஉணர்ந்த வல்லரசுகள் இன்றுதமிழரை வைத்தே தமிழரின்விடுதலையை தாமதப்படுத்தமுயற்சிக்கின்றன.

ஆனால்எமது ஆயுதப்போர்மௌனிக்கப்பட்ட பின்னர்தாயகத்திலும் தமிழ்நாட்டிலும்புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள்நடாத்திய அறவழிப்போராட்டங்கள்எமது தமிழினப்படுகொலைக்கானநீதியைப்பெற்றுத்தருவதற்கானகதவுகளைத்திறந்தன. தமிழீழ மக்களின்விடுதலைக்கான முதல் கதவுதிறக்கப்பட்ட நேரத்தில்எமதுவிடுதலைக்கு நாம் கொடுத்தஉயிர்தியாகங்களை சில சுயநலவாதிகள்தமது நலனுக்காக பேரம்பேசுவதை நாம் அனுமதிக்க முடியாது.

ஆகவேபுலன் பெயர் தமிழீழஉறவுகளாகிய நாம் எமதுவரலாற்றுபணியை உணர்ந்து எம்தமிழீழ மக்களையும்தேசத்தையும்காப்பாற்ற அறவழி போராட்டங்களைமுன்னெடுக்கவேண்டும். இவ்வாறானபோராட்டங்களினூடகவேஎமக்கு சிங்கள பேரினவாதஅரசுகளினால் இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதி கேட்கவும்அதன்மூலம் எமது மக்களையும்மண்ணையும்பாதுகாக்கவும் முடியும்.

 மனித உரிமைகள்ஆலோசனைஅவையின்40 ஆவது  கூட்டத்தொடர்ஆரம்பிக்கப்படவுள்ளது.இவ்வேளையில்

 ஐரோப்பிய ஒன்றியம்,ஐரோப்பியஒன்றிய உறுப்புரிமை நாடுகளின்தூதரகங்கள், ஐரோப்பியபாராளுமன்றம், மாநகர சபைகள், மேல்சபைகள், பாராளுமன்றஉறுப்பினர்கள், எனஅனைவரிடத்திலும்தமிழினப்படுகொலைக்குஅனைத்துலக சுயாதீன விசாரணை மூலமே நீதிகிடைக்குமென வலியுறுத்திமனிதநேய ஈருருளிப்பயணம்தொடங்கவுள்ளது.

 18.02.2019  திங்கட்கிழமைஅன்று,பிற்பகல் 14.30மணிக்கு ஐரோப்பியஒன்றியம் முன்பாக (Rond-Point Robert SCHUMAN, 1000 Brussels ),தமிழினத்தின்மீது சிங்கள பேரினவாதஅரசுகளால் நடாத்தப்பட்டதமிழினப்படுகொலைகளுக்கும்தற்போது திட்டமிட்டபடி தொடருகின்றதமிழனவழிப்புக்கும் அனைத்துலகசுயாதீன விசாரணையேநீதியைப்பெற்றுத்தரும் எனவலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் தொடங்கவுள்ளது.

  சர்வதேசத்திடம் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலகசுயாதீன விசாரணையைவலியுறுத்தியும்,தமிழீழ மக்கள் தமது விருப்பைவெளிப்படுத்தஇலங்கைத் தீவின்வடக்கு கிழக்கு மாகாணங்களில்வாக்கெடுப்பினை நடாத்தவும்அவ்வாக்கெடுப்பில் புலம்யெர் தமிழீழமக்கள் கலந்து கொள்ள ஐக்கியநாடுகள் அவை ஆவண செய்யவும், தமிழீழ நிலப்பரப்பில் இயல்புவாழ்க்கை உருவாக்கப்பட்டு தமிழீழமக்களின் பேச்சு நடமாட்டசுதந்திரகளை உறுதிப்படுத்தவும் போன்றமுக்கிய கோரிக்கைகளைமுன்நிறுத்தி மனித நேயஈருருளிப்பயணம்நடைபெறவுள்ளது.தமிழீழ மக்களுக்கு நீதிகிடைக்க இவ்அறவழிப்போராட்டத்தில் பங்கெடுக்கஇருக்கும்மனித நேயச்செயற்பாட்டாளர்களை எம்முடன்தொடர்பு கொள்ளும்படிகேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழமக்களுக்கு நீதிவேண்டியும் தமிழீழத்தைஐக்கிய நாடுகள் அவைஅங்கீகரிக்கக் கோரியும்வேண்டி04.03.2019 திங்கட்கிழைமை ஐக்கியநாடுகள் அவையின் முன்பாகமுருகதாசன் திடலில் நடைபெறவுள்ளமாபெரும் கவனயீர்ப்புஒன்றுகூடலிலும் அனைவரையும்கலந்துகொண்டு தங்கள்வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.

அனைத்துநாடுகளிலிருந்தும் நிகழ்விற்கானபோக்குவரத்துஒழுங்குகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரயாணத்திற்கான முற்பதிவுகளைமேற்கொள்ளுமாறும்கேட்டுக்கொள்கின்றோம்.

“தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here