பாரிசில் கடும் போக்குவரத்து பாதிப்பு!

0
322

லண்டன் – பாரிஸ் இடையிலான ஈரோ ஸ்ரார் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்த கால வெடி குண்டு ஒன்றை செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் பாரிஸ் நகரின் Gare De Nord தொடருந்து மார்க்கத்தை அண்டிய பகுதியில் நடைபெற்றுவருகின்றது. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை முதல் ஈரோ ஸ்ரார் தொடருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை சேவைகள் முற்றாகத் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gare De Nord தொடருந்து சந்திப்புக்கு வடக்கே
Porte de la Chapelle பகுதியில் தரையில் வெடிக்காத நிலையில் புதைந்துகிடந்த இந்த பெரும் வெடி குண்டை கட்டட நிர்மாணப் பணியாளர்கள் சிலர் இந்த மாத தொடக்கத்தில் கண்டுபிடித்ததிருந்தனர். அதனை செயலிழக்கச் செய்ய எடுத்த முதலாவது முயற்சி பலனளிக்காததால் அப்பணி மீண்டும் இன்று நடைபெறவிருக்கிறது. குண்டை தரையின் கீழ் மேலும் ஆழத்துக்கு நகர்த்தி அங்கு வைத்து அதனை செயலிழக்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் அயல் பிரதேசம் எங்கும் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இன்று காலை இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர். வீதிகள் பல மூடப்பட்டு வாகனப் போக்குவரத்துகள் நிறுத்தப்படும்.

Gare De Nord நிலையத்தில் இருந்து செல்லும் உள்ளூர் தொடருந்து சேவைகள் அனைத்தும் குண்டு செயலிழக்கச் செய்யப்படும் வரை தடைப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here