44 இந்திய படையினர் பலியான தாக்குதலின் பின்னணி இதுதான்!

0
353

தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் புல்வாமா மாவட்டத்தில் இருக்கிறது கந்திபாக் என்ற கிராமம். அந்த கிராமத்தில் இருந்த மில்லில் வேலை பார்த்து வந்தவர் அதில் அகமது தார். அவருடைய வயது 20.

நேற்று தாக்கல் நடைபெற்ற சிறிது நேரத்திலே, தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஜெய்ஷ் -இ-முகமது. அப்போது, இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு மரணமடைந்த அதில் அகமது தார் பேசும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

மார்ச் 19, 2018 அன்று வீட்டில் இருந்து வெளியேறிய அவர் ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பில் இணைந்தார். அவர் காணாமல் போன அதே நாளில் காஷ்மீர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமீர் அகமது என்பவரும் காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல்த்துறையில் புகார் அளித்தனர். நான்கு நாட்கள் அவரை தேடும் பணி நீடித்த நிலையில் ”தான் ஃபிதாயின் இயக்கத்தில் இணைந்துவிட்டதாக கூறி, கையில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்”.

அந்த வீடியோவில் அகமது பேசுகையில் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று பேச தொடங்கினார்.

சி.பி.ஆர்.எஃப். படை வீரர்கள் செல்லும் பேருந்தின் மீது 350 கிலோ எடை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ காரை மோத வைத்து தாக்குதல் நடத்தியதில் அதில் அகமதும் உயிர் இழந்தார். “அவன் இயக்கத்தில் சேர்ந்த பிறகு ஒரே ஒரு முறை தான் எங்களை சந்தித்தான்” என்று அவருடைய தந்தை குலாம் ஹாசன் தார் கூறியுள்ளார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவராக இருந்த புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு நடைபெற்ற போராட்டத்தில் அதில் அகமதும் பங்கேற்றார். அதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்இ காலில் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பக்கமும் மக்கள் கொல்லப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. இங்கு அரசியல்வாதிகள் இதனை பயன்படுத்திய் ஆதாயம் அடைகின்றார்களே தவிர பிரச்சனைக்கான தீர்வினை யாரும் காண விரும்புவதில்லை. இளைஞர்கள் ஏன் துப்பாக்கியை தூக்குகின்றார்கள் என்பதை அரசு சிந்தித்து அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here