இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த தொடருந்து விபத்து தொடருந்துச் சாரதியின் சமயோசிதத்தால் தடுக்கப்பட்டது.
இன்று காலை 6.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி (புதிய தொடருந்து) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் பாதுகாப்பு கதவினை மூடாது தூக்கத்தில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தொடருந்து சாரதி திடீரன தொடருந்தின் வேகத்தை குறைத்து கடவை கதவுக்கு அண்மையில் தொடருந்தினை நிறுத்தினார். இந்நிலையில் வாகனங்கள் சென்று 10 நிமிடங்கள் பின்னரே தொடருந்து சென்றது.
குறித்த தொடருந்து சாரதி சமயோசிதத்துடன் செயற்பட்டமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடவை காப்பாளரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றது