அனுமதிப்பத்திர விநியோகம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர், பொறியியலாளர் சஞ்சன டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை (15) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தவுள்ளதாக, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
முறையற்ற விதத்தில் மணல் அகழ்வதால் திருகோணமலை மாவட்டத்தை சூழவுள்ள கரையோரங்களில் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சஞ்சன டி சில்வா கூறியுள்ளார்.
அத்தோடு, சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் புவிசரிதவியல், சுரங்கப் பணியகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவே நியமிக்கப்பட்டுள்ளது.