யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகன் நேரடியாக சென்று திர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம் நடைபெற்ற நல்லூர் முன்றலுக்கு நேரடியாகச் சென்ற ஆளுநரும் அரச அதிபரும் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த நீர்மாசடைதல் தொடர்பாக போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனை அடுத்தே உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
நீரைப்பருக வேண்டாம் என்றும், அறிக்கையை ஆராய்ந்து ஒரு வாரங்களுக்கள் முடிவை அறிவிப்பதாகவும், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து தூயநீருக்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் ஆளுநர் மற்றும், அரச அதிபர் உறுதிமொழி வழங்கினர்.
இதற்கு முன்னர் இன்று வடக்கு முதல்வரிடமிருந்து சாதகமான கடிதம் ஒன்று சற்றுமுன்னர் போராட்டக்காரர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் போராட்டக்காரர்கள் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளுக்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக அந்தக் கடிதத்தைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பிவிட்டமை குறிப்பிடத்தக்கத.