
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் காயமடைந்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் வருட மாணவர்கள் சிலரால் அவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று சக மாணவர்களால் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவர் சுஜீவனுக்கும் 4ஆம் வருட மாணவர்கள் சிலருக்கும் இடையே முறுகல் நிலை நீடித்தது.
மாணவன் சுஜீவனை நேற்று முன்தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியில் வைத்து பின்தொடர்ந்த நான்காம் வருட மாணவர்கள் சிலர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டிருந்தனர்.
எனினும் வீதியில் பொது மக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் நான்காம் வருட மாணவர்கள் சிலரின் அந்த முயற்சி பயனளிவில்லை.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக வாளாகத்திற்குள் அந்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள் சிலர் அவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் மாணவன் சுஜீவன் தலைப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.