சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் விரைவில் ஐ.எஸ். அமைப்பிடமிருந்து முற்றாக விடுதலை பெறும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமளவில் இது அறிவிக்கப்படும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிலைபேறான தீவிரவாத ஒழிப்பு அழுத்தம் பிரயோகிக்கப்படாவிட்டால் ஐ.எஸ். அமைப்பு மீளெழக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பு வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதத்தில் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அத்துடன், குறித் நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகள் 30 நாட்களில் நாடு திரும்பும் எனவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு கூட்டணி நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அடுத்த வாரமளவில் குறித்த நாடுகளில் ஐ.எஸ். அமைப்பு முழுமையாக வெற்றிகொள்ளப்படும் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.