மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை 8 ஆம் திகதி!

0
201

மன்னார் மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 139 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here