சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாளாக பிரகடனப்படுத்தப் பட்டு தமிழர் தாயகம் உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. பாரிசு மாநகரத்தில் சிறீலங்கா தூதரத்துக்கு முன்னால் கண்டன ஒன்று கூடல் நடாத்தப்பட்டது
சிறீலங்கா அரசு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதை எதிர்த்தும் இறுதி யுத்தத்தின் போது சிறீலங்கா படைகளிடம் சரணடைந்து காணமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி கோரியும், தொடரும் இனப்படுகொலையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழருக்கு சிறீலங்காவின் சுதந்திர நாள் கரிநாள் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஒன்று கூடலில் பங்குபற்றியோர் கறுப்புக் கொடியை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் சிறீலங்காவில் இடம்பெறும் இன அழிப்பையும், தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசால் ஏற்படுத்தப்படும் அநீதியையும் வெளிப்படுத்தி தமிழ், பிரெஞ்சு, சிங்கள மொழிகளில் உரைகள் இடம் பெற்றன. சிறீலங்காவின் இன அழிப்பை வெளிப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
சுதந்திர நாளில் தங்கள் தேசியக் கொடிகளை ஏற்றி அதற்கான மதிப்பளிப்பை மக்கள் செய்வது வளக்கம், ஆனால் சிறீலங்காத் தூதரகத்தின் முன் பறக்கும் சிறீலங்காவின் தேசியக்கொடி அகற்றப்பட்டு கம்பம் மட்டும் இருந்தது தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசு ஏற்றுக் கொண்டது போல் கொடி அகற்றப்பட்டதை உணரக்கூடியதாக இருந்தது.
t