வவுனியாவில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆர்ப்பாட்டம்!

0
317

வவுனியாவில் கொட்டும் மழையிலும் காணமல் ஆக்கப்பட்டவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாயக பிரதேசத்தில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கந்தசுவாமி ஆலயத்திலிருந்து  ஆரம்பமாகி வவுனியா நகரின் ஊடாக 715வது நாளாக காணமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்ட கொட்டகைக்கு ஊர்வலமாக சென்றடைந்திருந்திருந்தது.  

இவ்வார்ப்பாட்டத்தின் போது எங்களது பிள்ளைகள் எமக்கு வேண்டும், எமது உறவுகள் எமக்கு வேண்டும், அமெரிக்காவே எமது பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தர வரவேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here