திருகோணமலை தம்பலகாமத்தில் சிறிலங்கா இனப்படுகொலை படையினரால் படுகொலை செய்யப்பட்ட(01/02/1998) எட்டு பொதுமக்களின் நினைவுதின நிகழ்வு நேற்று நடைபெற்றது .
தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் நேற்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20வது ஆண்டு நிறைவு நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன் திருகோணமலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
கைவிடப்பட்டிருந்த இடுகாட்டின் தூபிகள் புனர்நிர்மாணிக்கப்பட்டு இந்நினைவேந்தலை நடாத்தத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.