சிறுமியைக் கடத்த முற்­பட்ட இளைஞனை நையப்புடைத்த நாவாந்துறை மக்கள்!

0
394

சிறுமி ஒரு­வ­ரைக் கடத்த முற்­பட்ட குற்­றச்­சாட்­டில், காத்­தான்­கு­டி­யைச் சொந்த இட­மா­கக் கொண்ட இளைஞனை மடக்­கிப் பிடித்து முறை­யான கவ­னிப்­பின் பின்­னர் பொலி­ஸா­ரி­டம் மக்­கள் ஒப்­ப­டைத்­த­னர்.

அவர் மருத்து­வ­ம­னை­யில் பொலிஸ் பாது­காப்­பி­லி­ருந்­த­ போது தப்­பிச் சென்­றுள்­ளார். இந்நிலையில் பொலி­ஸார் வேண்­டு­மென்றே அவ­ரைத் தப்­பிக்கவிட்­ட­னர் என்று நாவாந்­துறை மக்­கள் குற்­றம் சுமத்­தி­னர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- ‘கடந்த 23ஆம் திகதி எமது பகு­தி­யில் 12 வய­துச் சிறு­மியை உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞன் கடத்­திச் செல்ல முற்­பட்­டான். இருப்­பி­னும் சிறுமி பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டாள். கடத்த முற்­பட்ட இளை­ஞன் தப்­பிச் சென்­று­விட்டான். உந்­து­ருளி இல­கத்­தைக் குறித்து வைத்­துக் கொண்­டோம்.

நேற்று அதே உந்­து­ரு­ளி­யில் இளை­ஞன் ஒரு­வன் உலா­வு­வதை அவ­தா­னித்­தோம். சந்­தைப் பகு­தி­யில் அவரை மடக்கிப் பிடித்­தோம்’ என்று நாவாந்துறைப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

இளை­ஞனை மடக்­கிய மக்­கள் அவரை கம்­பத்­தில் கட்டி வைத்து முறை­யா­கக் கவ­னித்­த­னர். பொலி­ஸா­ருக்கு அறிவித்­த­போ­தும் 2 மணி­நே­ரம் தாம­த­மா­கவே அவர்­கள் அங்கு வந்­த­னர்.பொலி­ஸா­ரி­டம் இளை­ஞன் ஒப்படைக்கப்பட்­டான்.

இதன்­போது, தான் காத்­தான்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் சமை­யல் வேலைக்­கா­கவே யாழ்ப்­பா­ணம் வந்­தேன் என்றும் இளை­ஞன் தெரி­வித்­துள்­ளான்.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் 24ஆம் விடு­தி­யில் இளை­ஞனை பொலி­ஸார் சிகிச்­சைக்­கா­கச் சேர்ப்பித்­த­னர். அங்­கி­ருந்து மற்­றொரு விடு­திக்கு நேற்று மாலை 3.30 மணி­ய­ள­வில் இட­மாற்­றும்­போது இளைஞன் தப்­பித்­துச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இளை­ஞ­னுக்கு மருத்­து­வ­ம­னை­யில் கைவிலங்கு இன்­றியே சிகிச்சை வழங்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

இரு கால்களையும் இழந்த மாற்று திறனாளியின், தேசம் காத்த முன்னாள் போராளியின் வாழ்வாதாரம் மேம்பட உதவுவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here