வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு!

0
341

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக தற்பொழுது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளஜது. இப் போராட்டமானது பஸார்வீதி வழியாக அரசஅதிபர் காரியாலயத்தை அடைந்து அரசஅதிபர் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

இக் கவனயீர்ப்பு போராட்டம் குறித்து தெரிய வருகையில்,

நடந்து முடிந்த யுத்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டும் எம் கண்முன்னே கைது செய்யப்பட்டும் விசாரித்து விட்டு விடுகின்றோம் என்று கூறி அழைத்தும் செல்லப்பட்ட எமது கணவர்கள், மனைவியர்கள், பிள்ளைகள், சகோதரர்கள் எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இன்னும் வீடு திரும்பவில்லை.

நாம் அவர்களை இழந்து நிர்க்கதியாய் வாழ வழியின்றித் தவிக்கின்றோம். பல பிள்ளைகள் தமது அப்பாக்களை தெரியாதவர்களாக வாழ்ந்து வறுமையில் வாடி வருகின்றனர். பாடசாலை செல்ல முடியாதவர்களாக சென்றும் படிக்க முடியாதவர்களாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

பல மனைவியர் கணவர்களை தொலைத்துவிட்டு குடும்பங்களை நடாத்த முடியாமல் மனஅழுத்தங்களுக்கு ஆளாகி துன்பத்தில் உழலுகின்றனர்.

பல பெற்றோர் தமது பிள்ளைகளை காணாது தமது முதுமைக்காலத்தில் தம்மைப் பராமரிக்க யாருமில்லாது கஷ்டப்படுகின்றனர்.

நாம் இது தொடர்பாக பலவகையான போராட்டங்களை நடாத்தியிருக்கின்றோம். பலவகையான சாட்சியங்ளை அளித்திருக்கின்றோம். பலவகையான மகஜர்களை கொடுத்திருக்கின்றோம். கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர், சர்வதேச தூதுவராலயங்கள், ஐ.நா. மன்ற அலுவலகங்கள் என அனைத்துப் படிகளிலும் ஏறி எமது வேண்டுகோள்களை மனமுருகி விடுத்திருக்கின்றோம். ஆனாலும்
எதவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எமது உறவுகள் எம்மிடம் வந்து சேரவில்லை.

கடந்த காலங்களில் நாம் எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் நீங்கள் எங்களுக்கு பக்கபலமாய் இருந்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளீர்கள். மக்களின் பலமே எமக்கு  முயற்சிகளுக்கு உந்து சக்தியாக விளங்கியிருக்கின்றது என கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here