பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான லூ புளோமினில் தமிழ்சங்கம் 20.01.2019 அன்று தனது தமிழ்ச்சோலையின் 15 வது ஆண்டினை மிகவும் சிறப்பாக கொண்டாடியிருந்தது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும் மாணவர்கள் அறிந்து கொள்வதோடு அதைக்கொண்டாட வேண்டும் என்பதற்கமைய காலை பொங்கலிடல் நிகழ்வை நடாத்தியிருந்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், சிறப்புரைகள், பரிசளிப்பு என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தன.