விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில், கடலூர் நகரத்தில் கடலூர் நகர செயலாளர் மு.செந்தில் தலைமையில் ஈழ தமிழர்களுக்காக போராடி உயிர்நீத்த வீரத்தமிழன் ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மற்றும் சேலம் மாவட்ட நெறியாளர் பா தாமரைச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முத்துக்குமார் திரு உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் த.ஸ்ரீதர், மொ.வீ.சக்திவேல், பா.பிரதீப், ஜ.சுபாஷ்.தமிழரசன், பா ரா முரளி,அண்ணாதுரை….. மாவட்ட ,நகர,ஒன்றிய, நிர்வாகிகள் சேவல். ஜெயக்குமார். பு.ராஜா, ம.சுமன், மோ.விஜயன். கோபால், மகி, கமல், வெற்றி, வடிவேல், ராஜ்குமார், பாரத், பிரவீன். கண்ணன், சபரி , ஆனஸ்ட், பாபு, பரணி, உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மண்டல செயலாளர் சு.திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் தி ச திருமார்பன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.