20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை:மனித உரிமை மீறலே இல்லை என்கிறது ஆந்திரா அரசு!

0
444

andhra-shoot3செம்மரம் கடத்தியதாக 12 தமிழர் உட்பட 20 தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு இதில் மனித உரிமை மீறல் எதுவுமே இல்லை என்று சாதிக்கிறது ஆந்திரா அரசு. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி இன்று அதிகாலை அம்மாநில போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இத்தேடுதல் நடவடிக்கையின் போது 20 தொழிலாளர்களை அம்மாநில காவல்துறை சுட்டுக் கொன்றது. இதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆந்திரா உள்துறை அமைச்சர் சின்ன ராஜகப்பாவிடம் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் விளக்கம் அளிக்கையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாலேயே சுட்டுப் படுகொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திரா அரசு உத்தரவிட்டுள்ளது. எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திரா அமைச்சர் சின்ன ராஜப்பா, இச்சம்பவத்தில் எந்த ஒரு மனித உரிமை மீறலுமே இல்லை. செம்மரக் கடத்தல்காரர்களும் தொழிலாளர்களும் மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here