புத்தளம் சிலாபம் வீதியில் முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு மாதக் குழந்தை உட்பட மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரியங் கள்ளி என்ற இடத்தில் நேற்று அதிகாலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. 8 மாத இரட்டைக் குழந்தைகளில் ஒன்றே விபத்தில் பலியாகியுள்ளதுடன். மற்றைய எட்டுமாதக் குழந்தை உட்பட இருவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாகவும், புத்தளம் இஸ்மாயில் புரம் பிரதேசத்தில் வதிபவர்கள் எனவும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தவேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.