ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக மாலி இராச்சியத்துக்கு சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில், இராணுவத்தில் கப்டன் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்காப் படையினர் பயணித்த வாகனத்தின் மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.