தொண்டமானாறு கடலில் காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!

0
538

mithulan newதொண்டமானாறு, அக்கரை கடலில் சனிக்கிழமை நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது காணாமற்போன இளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் வடக்குப் பகுதியை சேர்ந்த கருணானந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

நண்பர் ஒருவரின் பிறந்ததினத்தை கடலில் கொண்டாடும் முகமாக 12பேர் கொண்ட குழுவினர் நேற்று கடலுக்குச் சென்றுள்ளனர். அங்கு கடலில் நீராடிய சமயம் ஒருவர் காணாமற்போயிருந்தார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. எனினும் காணாமற்போனவர் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் ஏனைய 11 பேரும் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.

இன்று காலை மீனவர்கள் சிலர் கடலுக்கு சென்ற சமயம் குறித்த இளைஞரின் சடலம் கடலில் மிதந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here