காணாமல் போனோர் ஆணைக்குழுவின் அமர்வைப் புறக்கணித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டம்!

0
258
kalmunai_arpadam_002காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடு விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆணைக்குழு அமர்வுகளைப் பகிஸ்கரிக்கும் ஆர்ப்பாட்டமொன்று நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்றது.
காணாமல் போனோர் உறவுகளைத் தேடும் தமிழ் சிவில் அமைப்புகள் ஏற்பாட்டில் அமைதியான கறுப்புப்பட்டி ஆர்ப்பாட்டம் அமர்வு நடைபெற்ற பிரதேசசெயலகம் முன்னால் இடம்பெற்றது.
அம்பாறையில் இன்று முதல் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை சாட்சி விசாரணை நடைபெறவுள்ளது. பத்து பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 300 முறைப்பாட்டாளர்களுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இன்று மற்றும் நாளை கல்முனை பிரதேச செயலகத்திலும் 8 மற்றும் 09ஆம் திகதிகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சாட்சி விசாரணை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/0vku0LHYD2o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here