முதல்வர், யாழ் ஆயருடன் ஆஸ்திரேலியத் தூதர் வடக்கு நிலைமைகள் குறித்து ஆராய்வு!

0
99
Mannar-Bishop-Aus-HC meet cmவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும், அவுஸ்திரேலத் தூதுவர் ரொபின் மூடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது. விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பி ன்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னரான வடக்கின் நிலை குறித்து ஆஸ்திரேலியத் தூதர் முதல்வருடன் விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.
வடக்கிலுள்ள நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ள விக்கினேஸ்வரன், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்பார்த்தளவு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், புதிய அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட தொடர்ந்தும் அவுஸ்திரேலியா முயற்சிகளை முன்னெடுக்கும் என முதல்வரிடம் ரொபின் மூடி உறுதியளித்திருக்கிறார்.
இதேவேளை, ஆஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடிக்கும் யாழ். மறைமாவட்ட ஆயருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று காலை 9.30 மணியளவில் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றத்து.
இந்த சந்திப்பின் போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னரான வடக்கு நிலமைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், ஆட்சி மாற்றத்துடன் வடக்கில் பெரியளவு மாற்றங்கள் ஏற்படாவிடினும், சிறியளவிலான மாற்றங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன என்று ஆஸ்திரேலியத் தூதரிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.
“காணிகள் கையளிப்பு குறித்த வாக்குறுதிகள், ஆளுநர் மாற்றம், போன்றன நம்பிக்கை தருவனவாக உள்ளன. வடக்கிற்கு வருகை தந்த பிரதமரும் பல்வேறு விடயங்களை நேரில் ஆராய்ந்து சென்றுள்ளார். குறிப்பாக இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும், மீனவர் பிரச்சினைக்கு சரியானதொரு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் எனவும் கூறிச்சென்றுள்ளார். இவ்வாறு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நடந்த பிரதமரின் விஜயமும் முக்கியமானது என ஆஸ்திரேலிய தூதருக்கு விளக்கினேன்,” என ஆயர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஆஸ்திரேலியத் தூதர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆஸ்திரேலிய அரசு முன்னெடுத்துள்ளதாகவும், அந்தத் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து மக்களுக்கு உதவுவோம் எனவும் உறுதியளித்ததாகவும் ஆயர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here