இன்று காலை பாட்டாளிபுரத்திலிருந்து மூதூர் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் தங்கபுரத்திலிருந்து கொக்கட்டி நோக்கிப் பயணித்த உந்துருளியும் வேம்படித்தோட்டச்சந்தியில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டதில் தங்கபுரத்தைச் சேர்ந்த வைரமுத்து ஸ்ரீமனோகரன் (வயது38)என்கின்ற உந்துருளியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் உதவி கேட்டுக் கதறிக் கொண்டிருக்க அங்கே குவிந்த பொது மக்கள் தங்கள் தொலைபேசிகளில் காயமடைந்தவர்களையும் வாகனங்களையும் படம் பிடிப்பதிலேயே நேரத்தைக் கழித்தனர் சுமாராக 35நிமிடங்களின் பின்னர் காயமடைந்தவரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றாலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சில மனிதர்களது கீழ்த்தரமான செயல் இன்று ஓர் உயிரைத் தவற விட்டு விட்டது.