வினைத்திறனாக மேற்கொள்ளப்படும் யுத்தக்குற்ற விசாரணையே காயங்களை குணப்படுத்தும் – மன்னிப்பு சபை

0
156

amnestylogoயுத்தக்குற்ற விசாரணை ஒன்றிறை வினைத்திறனாக மேற்கொள்ளப்படும் யுத்தக்குற்ற விசாரணையே காயங்களை குணப்படுத்தும் – மன்னிப்பு சபைத்திறனாக மேற்கொள்வதன் மூலமே தமிழீழ மக்கள் அடைந்த பாதிப்புகளில் இருந்து அவர்களை குணப்படுத்த முடியும் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் ஆசிய பிராந்திய உதவி பணிப்பாளர் டேவிட் கிரிஃப்த்ஸ் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளின் படி சர்வதேச தரத்தில் விசாரணைகளை நடத்த வேண்டும்.

ஆனால் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களால் இந்த விசாரணைகளின் நம்பகத்தன்மை பாதிப்படையும்.

இதன் காரணமாகவே மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னர் இருந்தே வலியுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here