சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்த போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 19 பேர் பலியான நிலையில் 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது இந்நிலையில் குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறன.
சீனாவில் செயற்படும் நிலக்கரி சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.