மூன்று மோட்டார் சைக்கிளில் வாகனத்தகடுகளை மறைத்தும், முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு வந்த ஆறு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானை, முகத்தை மூடி வந்த குழு அடித்துச் சேதமாக்கியது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்கரப்பிள்ளை கோவிலடிப்பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.
வாகன உரிமையாளர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.