பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு எதிராக ‘மஞ்சள்சட்டைப் போராட்டம்’ என்ற பெயரில் கடந்த 7 வார காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்குத் தண்டனை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் Edouard Philippe அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 80,000 பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தவுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாரிஸில் மற்றொரு பகுதியில் குறித்த போராட்டத்தின்போது, கலகமடக்கும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதோடு, உந்துருளிகள் மற்றும் மகிழுந்துகள் போன்ற பெறுமதியான உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, போராட்டங்களின்போது தீங்கு ஏற்படுத்துபவர்களைத் தடைசெய்வதற்கும் முகமூடிகளை அணிந்து போராட்டம் நடாத்துவதைத் தடை செய்வதற்குமாக, புதிய சட்டங்களை இயற்றவுள்ளதாக எடுவார்டே பிலிப்பே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த வார இறுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின்போது, அரசாங்க அலுலகங்களின் நுளைவாயில்கள் அடித்து நொருக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.