உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 6 வருட காலமாகப் பதவியிலிருக்கும் அவரது பதவிக்காலம் நிறைவடைவதற்கு 3 ஆண்டுகள் உள்ளநிலையில், அடுத்த மாதம் தாம் பதவியிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, 59 வயதான ஜிம் யோங் கிம் பதவி விலகியதன் பின்னர், உலக வங்கியின் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியான கிரிஸ்டாலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva), உலக வங்கியின் இடைக்காலத் தலைவராகக் கடமையாற்றவுள்ளார்.