
இலங்கையில் உயர்மட்ட அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஆகியோரை ஐ.நா உதவிச்செயலர் ஹோலியாங் சூ சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தின் பின்னர், எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் குறித்து அபிவிருத்திப் பங்காளர்களுடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.
ஐ.நா உதவிச்செயலர் ஹோலியாங் சூ வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.