கனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு!

0
193


தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த கனகசபை பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் 02.01.2019 அன்று காலமானார் என்னும் செய்தியறிந்து தமிழீழ மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தில் பணியாற்றிய கப்படன் பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து தன் அரசபணியைத் தமாகவே துறந்தவர்.

பிரித்தானியா கப்பல் போக்குவரத்துச் சேவையில் கப்பல் அதிகாரியாக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்போரின் முன்னோடிகளில் ஒருவராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடன் இணைந்து தொடக்ககாலங்களில் இருந்தே விடுதலைப்போரில் பங்குகொண்டு பணியாற்றினார்.

1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதன் முதலாகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்காக வணிகக் கப்பல் நிறுவனத்தை உருவாக்கியோதொடு மட்டுமல்லாது எமது அமைப்பின் அனைத்து கப்பல் போக்குவரத்துக்களும் இவர் மேற்பார்வையிலையே நடந்தது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பங்குகொண்டு சிறைவாசம் கண்ட பிறைசூடி அவர்கள் தன் இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைக்காகவே வாழ்ந்தார். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் நாமும் இணைந்துகொள்வதுடன் அமரர் கனகசபை பிறைசூடி அவர்களிற்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிக்கப்படுகின்றது.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழவிடுதலைப் புலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here