பிரான்சில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
321

பிரான்சில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை நியூலிசூமார்ன் பகுதியில் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 26/12/2007ம் ஆண்டு நெடுந்தீவு கடல் சமரில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.

2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார் .
ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.
யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்தபோது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அந்த முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோரமுகத்தை காட்டி நின்றது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here