மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவுதினம்!

0
326

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத கருத்துக்களுக்கு சவால் விடும் வகையில் தலைநகரில் தனித்து நின்று துணிந்து போராடிய மாமனிதர் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்றைய தினமாகும்.

அதனை முன்னிட்டு தமிழர் தாயக பகுதியெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சர்வதேச ரீதியில் வெளிச்சம் போட்டுக்காட்டிய அமரர் குமார் பொன்னம்பலம், கடந்த 2000ஆம் ஆண்டு இதே நாளில் தலைநகர் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிறந்த சட்டவாதியான அவர், இனவாத செயற்பாடுகளால் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடியதோடு, அவர்களது வழக்குகளில் கட்டணமின்றி பணியாற்றினார். தமிழ் இனத்திற்காக அவர் ஆற்றிய மனிதநேய மற்றும் துணிச்சல் மிக்க சேவையால் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த அவர், பேரினவாதிகளுக்கு சிம்ம சொப்பணமாய் அமைந்திருந்தார். அந்த உணர்வே பேரினவாதிகள் அவரது உயிரைக் குடிக்க காரணமாய் அமைந்துவிட்டது.

தமிழ் மக்களுக்காய் அவர் ஆற்றிய சேவைக்காக ‘மாமனிதர்’ என்ற அதியுயர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்காய் குரல்கொடுத்த குமார் பொன்னம்பலத்தைப் போன்ற பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்டபோதும், அவற்றிற்கான நீதி இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here