நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக உலங்குவானூர்தி அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த உலங்குவானூர்தி வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.