திருகோணமலையில் 13 வது அதிரடிப்படையினரால் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 13 வது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை திருகோணமலை கடற்கரையில் அனுஸ்டிக்கப்பட்டது. திருகோணமலை இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு தின நிகழ்வில், பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
02.01.2006 அன்று திருகோணமலை, கடற்கரையில் வைத்து ஐந்து தமிழ் மாணவர்கள் அதிரடிப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். உயர்தர பரீட்சையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்த மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பொலிஸாரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்ததுடன், பின் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்றும், இராணுவத்தின் மீது கிரனைட் தாக்குதல் நடத்த முற்பட்ட போது, கிரனைட் வெடித்து உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
எனினும், இறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பகுப்பாய்வாளர் இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து இப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு, அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற போதிலும், இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகப்பகுதியில் மிக மோசமாக படுகொலை செய்யப்பட்ட மாணவசமூக துயரச்செய்தியை சுமந்து கொண்டே, இன்னமும் நாம் நல்லாட்சியின்
நயவஞ்சக நிழலில் எதிர்க்கட்சி ஆசன பெருமையில் வாழ்கின்றோம் என்பது எவ்வளவு கேவலமானது என்பதை பகுத்தறிய யாருமில்லையோ!
02.01.2006 இல் தமிழ் தாயக தலைநகரின் கடற்கரையில் பொழுதை கழித்து கொண்டிருந்த அப்பாவி தமிழ் மாணவர்களை சிங்கள பௌத்த அரசு, அதாவது சாணக்கியரின் நல்லாட்சி அரசு படுகொலை செய்தது. இதற்கு ஏதாவது நீதி வாங்கி தரமுடிந்ததா? அல்லது எந்த நீதிமன்றிலாவது வழக்கை தொடர்ந்து வாதாடினார்களா? இல்லையே!
அப்பாவி மாணவர்களின் படுகொலை இரத்த வாடை தீருமுன்னே! நல்லாட்சி மகுடி ஊதிய பாம்பாட்டி சம்பந்தர் இன்னமும் பகுத்தறிவு தமிழிரிடையே நற்பெயரோடு வாழ்கின்றார். பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் அச்சுறுத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டனர்.
இன்னமும் சம்பந்தரே வேண்டுமென வாதிடும்
தமிழர்களே! இம்மாணவ செல்வங்களுக்கான நீதி ஏன் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டது என கூறமுடியுமா?
சாணக்கியரின் அரசியியல் லாபத்துக்காக இன்னமும் பலியிடல் நடக்கும், நீங்களே நடத்தி அவரை வணங்கி வாழுங்கள் தமிழினம் உருப்படும்.
எம் மாணவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டும் நாம்
சிங்களதேச அரசை நம்புவது எத்தகைய அடி முட்டாள்தனம் என்பதை எப்போது தமிழராகிய நாம் உணரப்போகிறோம்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:
மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)
இவர்கள் என்ன ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகளா?
அநியாயமாக ஆவி துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்ட என் தம்பிகளின் புனித ஆன்மா அமைதி கொள்ள விழிநீர் அஞ்சலிகள்.